Tuesday, 21 June 2011

வேண்டாமே ப்ளீஸ் ...


இன்று தமிழ் இளைஞன் ஒருவன் வாய் திறக்க இயலவில்லை
 என்று எங்கள் மருத்தவ பிரிவுக்கு வந்தான்.
ப்ளம்பிங் வேலை செய்யும் அவன்,வேலை முடிந்து ரூம்க்கு
 திரும்பி அசதி மேலிட மேஜை மேல் இருந்த
 தண்ணீர் பாட்டிலை வாயில் சரிக்க அதிர்ந்தான்.
அது பைப் சுத்தம் செய்ய பயன்படுத்தும் அசிட்.
முழுதும் குடித்துவிடாமல் வெளியில் துப்பி விட்டான்.
அதானால் வாயில் மட்டும்மே பாதிப்பு.
வாய் முழுவதும் வெந்து காணவே மிக கொடுமை.
சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும்
 நாக்கு,வாய்,உட்புறத்து கன்னச்சதைகள் அனைத்தும் 
பாதிக்கபட்டு இருந்தது.
நாக்கின் தசைகள் பாதிக்க பட்டு இறுகி விட்டது.
நாக்கின் அசையும் தன்மையும் ,உணர்வும் 
பெரிய அளவில் பாதிக்க பட்டு இருந்தது.
இது மாதிரி கணங்களில் உயிர் பிழைத்து இருப்பது போல் 
ஒரு நரக வேதனை இருக்க முடியாது.ஒரு மாதம் ஆகியும்
 அவனால் சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை,
பேச முடிய வில்லை ,ஏன் வாய் திறக்க இயலவில்லை.

   ஆகவே நண்பர்களே இனி இது போன்ற திரவங்கள்,
மேலும் உடம்புக்கு ஊறுசெய்யும் எதுவுமே உணவு பொருள் 
வைக்கும் மேஜை அல்லது அந்த குடிநீர் பாட்டில்,
உணவு பொருள் தாங்கி வந்த பழைய டப்பா 
முதலியவைகளில் தயை கூர்ந்து வைக்காதீர் .

நானே ஒரு முறை அதுபோல் பெயிண்ட் மிக்ஸ் செய்யும் தின்னரை 
தண்ணீர் பாட்டிலில் வைக்க என் அன்னை அதை எடுத்து குடித்ததும்.,
எங்கள் கல்லூரியில் அட்டெண்டர் கவனக்குறைவாக 
மேஜையில் ஸ்பிரிட் (எரிசாராயம் ) குடிநீர் பாட்டிலில் வைக்க.,
இருப்பது குடிநீர் என நம்பி சகமருத்துவர் ஒருவர் குடித்த
 கதைகள் நடந்து உண்டு.

சில நேரங்களில் நம் கவனக்குறைவால் யாரோ இல்லை
 நம் உயிரோ இல்லை உடம்போ பாதிக்க படக்கூடும் .
கவனம் ப்ளீஸ் .,, 

Thursday, 26 May 2011

வாய் இறுகு நோய்





வாய்  இறுகு நோய்




நோயின் தன்மை :
கன்னத்து உட்புறதசைகள்  அதன்  இலகு தன்மை இழந்து இறுகிப்போய் வாய் திறப்பது  கடினமாகும் இந்நிலையே  வாய் இறுகு நோய்.

வாயின்  சதைகளில் ரத்தஓட்டம்  குறைந்து சதை வெளிறி காணப்படுதல் எரிச்சல்,வாய் உலர்ந்து போதல் , சுவை அறியும் திறன் குறைதல் போன்றவை இதன்  அறிகுறிகள்.சில நேரங்களில் குரல் மாற்றம் , கேக்கும் தன்மை குறைதல் போன்றவையும் ஏற்படலாம்.
பொதுவாக நான்கு விரற்கிடை திறக்கும் வாய்,இரண்டு விரற்கிடைக்கும்  குறைவாய் திறத்தல் இந்நோயின் கொடுமையை உணர்த்தும் 

காரணிகள் :
பொதுவாக பான்பராக் ,  பாக்கு  , புகையிலை , அதிகமான காரம்  பயன் படுத்துவோர் ,வைட்டமின் சத்து குறைபாடு  உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படும்  வாய்ப்புகள் அதிகம்.

 பாக்கு , தம்பாக்கு, புகையிலை, அதிக காரம்  போன்றவற்றை
தவிர்த்தல்,இரும்பு சத்து ,வைட்டமின் அதிகம் உள்ள உணவு
அதிகமாய் எடுத்தல் , அவ்வப்போழுது பல் மருத்தவரை காணுதல்,
வாய் நலம் பேணுதல், நலம் தரும் .


துவக்க நிலையில் பான்பராக்,பாக்கு  நிறுத்தல்
காபி , டீ,  ஆல்கஹோல் தவிர்த்தல் , மற்றும் சில எளிய வாய் திறக்கும் பயிற்சிகள் போதும்.
முற்றிய  நிலையில் ஸ்டிராய்ட் இன்ஜெக்சன் தரும் முறையும்,
அறுவை சிகிச்சையும்  தற்சமயம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஸ்டெம்  செல் கொண்டு மருத்துவம் செய்தல் குறித்த
ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வருகின்றன.









.
.
.

Wednesday, 4 May 2011

புன்னகையின் விலை

நிக்கோடின் கறையை நீக்கலாம்னு நினைச்சேன், ஒரு நண்பர், அதனால் பல்லில் இருக்கும் எனாமல் போகும்னு சொல்றார், உண்மையா, நான் பல்லை கிளீன் பண்ணலாமா இல்லை இனிமே ஒழுங்கா!? பல்லு விளக்கினா மட்டும் போதுமா!?

இது பலருக்கும் வரும் ஐயம்,
பல் மருத்துவரின் துணை கொண்டு வருடம் ஒரு முறை பல் சுத்தம் செய்வதால் எந்த ஒரு கெடுதலும் வருவது இல்லை .
பல் சுத்தம் செய்யப்படும் போது எனாமல் நீக்க படுவது இல்லை , பல் மேல் படிந்துள்ள வெளிப்புற கறை,மற்றும் காறை மட்டுமே நீக்கப்படுகிறது.
ஒரு நாள் இல்ல இரு நாட்கள் பல் கூச்சம் இருக்கலாம்,அது மிக இயல்பான விடயம்.
பல் மேல் பதிந்துள்ள காறை நீங்கும் போது பற்களின் இடைவெளி அதிகரித்துள்ளது போல் தோன்றும் அதும் இயல்பே,முறையாய் பல் சுத்தம் பேணப்படும்,போது பின்னர் அவ்விடைவெளி,ஈறு பகுதி வளர்ந்து அடைபடும். 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


டாக்டர் எனக்கு 33 வயசு ஆகுது, பல்லுக்கு இடையில் ஒரு சின்ன கேப்பு இருக்குது, இப்போ பல்லு கட்டுனா அதை சரி செய்ய முடியுமா? இல்லை சிமெண்ட் வச்சு ஓடையை அடைச்சிரலாமா?

இந்த கேள்வியை கேட்டிருப்பது, மதுரையிலிருந்து மங்கூஸ் பாண்டி, உங்க பதில் என்ன டாக்டர்!

@ மங்கூஸ்பாண்டி .,
நீங்க விருப்பட்டா ஷங்கர்,இல்ல அரசு,டால்மியா போன்ற சிமெண்ட்களை பயன்படுத்தலாம்

ஆனால் பல் மருத்தவரின் துணை கொண்டு செய்யப்படும் போது,பற்களின் இடைவெளியை கணக்கிட்டு,பல் நிறம் கொண்ட ரெசின் மூலம் அந்த சந்து அடைக்கப்படும்
கம்பி போட்டு சரி செய்யலாம்,ஆனால் அதற்கு முன் தங்களின் பல்லின் ஆரோக்கியம் கணக்கில் கொள்ளப்படும்.
சில நேரத்தில் பல் எடுத்து விட்டு வேறு பல் வைப்பதும் பரிந்துரை செய்யப்படும்.
மேற்கொண்டு தகவலுக்கு அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகவும்

Friday, 29 April 2011

புன்னகையின் விலை...

பல் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது,
பல் போனால் சொல் போச்சு என்பது விடவும் , 
பல் நலம் மற்றும் வாயின் நலம் பேணல் மிகவும் அவசியமானது.
அம்மை,சர்க்கரை,ஏமக்குறை,சில ரத்த சமந்தப்பட்ட வியாதிகள்
பெரும்பாலும் பல் மருத்தவர் தன்
இயல்பான சோதனையில் கண்டறிகிறார்கள்.

கீழ காணப்படும் காணொளிகள் பல் மருத்துவம்
பற்றி மிக எளிதாக விளக்கம் தருகிறது.

மேலும் ஏதும் ஐயம் உண்டு என்றால் பின்னுட்டத்தில் கேக்கவும்,
இயன்ற பதிலை தருவோம்.









நன்றி -மரு.அருண் ராபர்ட் ,
திருச்சி