இன்று தமிழ் இளைஞன் ஒருவன் வாய் திறக்க இயலவில்லை
என்று எங்கள் மருத்தவ பிரிவுக்கு வந்தான்.
ப்ளம்பிங் வேலை செய்யும் அவன்,வேலை முடிந்து ரூம்க்கு
திரும்பி அசதி மேலிட மேஜை மேல் இருந்த
தண்ணீர் பாட்டிலை வாயில் சரிக்க அதிர்ந்தான்.
அது பைப் சுத்தம் செய்ய பயன்படுத்தும் அசிட்.
முழுதும் குடித்துவிடாமல் வெளியில் துப்பி விட்டான்.
அதானால் வாயில் மட்டும்மே பாதிப்பு.
வாய் முழுவதும் வெந்து காணவே மிக கொடுமை.
சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும்
நாக்கு,வாய்,உட்புறத்து கன்னச்சதைகள் அனைத்தும்
பாதிக்கபட்டு இருந்தது.
நாக்கின் தசைகள் பாதிக்க பட்டு இறுகி விட்டது.
நாக்கின் அசையும் தன்மையும் ,உணர்வும்
பெரிய அளவில் பாதிக்க பட்டு இருந்தது.
இது மாதிரி கணங்களில் உயிர் பிழைத்து இருப்பது போல்
ஒரு நரக வேதனை இருக்க முடியாது.ஒரு மாதம் ஆகியும்
அவனால் சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை,
பேச முடிய வில்லை ,ஏன் வாய் திறக்க இயலவில்லை.
ஆகவே நண்பர்களே இனி இது போன்ற திரவங்கள்,
மேலும் உடம்புக்கு ஊறுசெய்யும் எதுவுமே உணவு பொருள்
வைக்கும் மேஜை அல்லது அந்த குடிநீர் பாட்டில்,
உணவு பொருள் தாங்கி வந்த பழைய டப்பா
முதலியவைகளில் தயை கூர்ந்து வைக்காதீர் .
நானே ஒரு முறை அதுபோல் பெயிண்ட் மிக்ஸ் செய்யும் தின்னரை
தண்ணீர் பாட்டிலில் வைக்க என் அன்னை அதை எடுத்து குடித்ததும்.,
எங்கள் கல்லூரியில் அட்டெண்டர் கவனக்குறைவாக
மேஜையில் ஸ்பிரிட் (எரிசாராயம் ) குடிநீர் பாட்டிலில் வைக்க.,
இருப்பது குடிநீர் என நம்பி சகமருத்துவர் ஒருவர் குடித்த
கதைகள் நடந்து உண்டு.
சில நேரங்களில் நம் கவனக்குறைவால் யாரோ இல்லை
நம் உயிரோ இல்லை உடம்போ பாதிக்க படக்கூடும் .
கவனம் ப்ளீஸ் .,,
ஃபினாயிலை பால் என நினைத்து ஒருவர் குடித்து அவதிப்பட்டதை பார்த்திருக்கேன்.
ReplyDelete@RohiniSiva:நல்ல பகிர்வு..... அப்படியே என்னோடைய வலையதுக்கும் வரலாம்ல... முதல் பதிவிருக்கு மட்டும் வந்து பின்னூட்டம் இட்டீர்கள்.. அதற்க்கு பிறகு ஆளயே காணோம்......
ReplyDeleteWhat kinda guidance?
ReplyDelete