Wednesday, 4 May 2011

புன்னகையின் விலை

நிக்கோடின் கறையை நீக்கலாம்னு நினைச்சேன், ஒரு நண்பர், அதனால் பல்லில் இருக்கும் எனாமல் போகும்னு சொல்றார், உண்மையா, நான் பல்லை கிளீன் பண்ணலாமா இல்லை இனிமே ஒழுங்கா!? பல்லு விளக்கினா மட்டும் போதுமா!?

இது பலருக்கும் வரும் ஐயம்,
பல் மருத்துவரின் துணை கொண்டு வருடம் ஒரு முறை பல் சுத்தம் செய்வதால் எந்த ஒரு கெடுதலும் வருவது இல்லை .
பல் சுத்தம் செய்யப்படும் போது எனாமல் நீக்க படுவது இல்லை , பல் மேல் படிந்துள்ள வெளிப்புற கறை,மற்றும் காறை மட்டுமே நீக்கப்படுகிறது.
ஒரு நாள் இல்ல இரு நாட்கள் பல் கூச்சம் இருக்கலாம்,அது மிக இயல்பான விடயம்.
பல் மேல் பதிந்துள்ள காறை நீங்கும் போது பற்களின் இடைவெளி அதிகரித்துள்ளது போல் தோன்றும் அதும் இயல்பே,முறையாய் பல் சுத்தம் பேணப்படும்,போது பின்னர் அவ்விடைவெளி,ஈறு பகுதி வளர்ந்து அடைபடும். 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


டாக்டர் எனக்கு 33 வயசு ஆகுது, பல்லுக்கு இடையில் ஒரு சின்ன கேப்பு இருக்குது, இப்போ பல்லு கட்டுனா அதை சரி செய்ய முடியுமா? இல்லை சிமெண்ட் வச்சு ஓடையை அடைச்சிரலாமா?

இந்த கேள்வியை கேட்டிருப்பது, மதுரையிலிருந்து மங்கூஸ் பாண்டி, உங்க பதில் என்ன டாக்டர்!

@ மங்கூஸ்பாண்டி .,
நீங்க விருப்பட்டா ஷங்கர்,இல்ல அரசு,டால்மியா போன்ற சிமெண்ட்களை பயன்படுத்தலாம்

ஆனால் பல் மருத்தவரின் துணை கொண்டு செய்யப்படும் போது,பற்களின் இடைவெளியை கணக்கிட்டு,பல் நிறம் கொண்ட ரெசின் மூலம் அந்த சந்து அடைக்கப்படும்
கம்பி போட்டு சரி செய்யலாம்,ஆனால் அதற்கு முன் தங்களின் பல்லின் ஆரோக்கியம் கணக்கில் கொள்ளப்படும்.
சில நேரத்தில் பல் எடுத்து விட்டு வேறு பல் வைப்பதும் பரிந்துரை செய்யப்படும்.
மேற்கொண்டு தகவலுக்கு அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகவும்

6 comments:

  1. நன்றிங்க டாக்..டர்..

    ReplyDelete
  2. அட! ஒரு‍ பல் மருத்துவர் வலைப்பூவில் அதகளப்படுத்த ஆரம்பித்திருக்கிறாரே. பல் சம்பந்தமான லேட்டஸ்ட் தகவலுடன் தங்களை தினமும் எதிர்பார்க்கப் போகிறேன்.

    ReplyDelete
  3. இப்பதிவுக்கு தொடர்பில்லாத கேள்வி ஒன்று:

    கண் மருத்துவத்தில் M.B.,B.S., முடித்து அதன்பின் சிறப்புப் படிப்பு. ஆனால் பல் மருத்துவத்திற்கு அப்படி கிடையாதே .. ஏன்?

    கண்ணை விட பல் மருத்துவருக்கு M.B.,B.S. - பொது மருத்துவம் - தேவை என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  4. ஒரு சமயத்துல பொது மருத்துவருக்கு ஈடாக, பல் மருத்துவர் தேவை என்னும் சூழல் இருக்க,
    தேவைக்கு ஈடு செய்ய கல்வி திட்டத்துல சில மாறுதல் செஞ்சு , தனியா பல் மருத்துவ படிப்பு வந்தது.
    பல் மருத்துவரும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை குறித்து படித்து, நான்காம் வருடம் தான் பல் மருத்துவத்துறையின் பல சிறப்பு துறையிலும் உள்ள பொது நுணுக்கங்களை படித்து அறிகிறோம்

    ReplyDelete
  5. டாக்டர், தமாஷுக்கு ஏதேனும் சொன்னா அதை ஸ்மையாவது போட்டு தெளிவு படுத்தவும். ஒரு நேரம் போல இராது!

    ReplyDelete