வாய் இறுகு நோய்
நோயின் தன்மை :
கன்னத்து உட்புறதசைகள் அதன் இலகு தன்மை இழந்து இறுகிப்போய் வாய் திறப்பது கடினமாகும் இந்நிலையே வாய் இறுகு நோய்.
வாயின் சதைகளில் ரத்தஓட்டம் குறைந்து சதை வெளிறி காணப்படுதல் எரிச்சல்,வாய் உலர்ந்து போதல் , சுவை அறியும் திறன் குறைதல் போன்றவை இதன் அறிகுறிகள்.சில நேரங்களில் குரல் மாற்றம் , கேக்கும் தன்மை குறைதல் போன்றவையும் ஏற்படலாம்.
பொதுவாக நான்கு விரற்கிடை திறக்கும் வாய்,இரண்டு விரற்கிடைக்கும் குறைவாய் திறத்தல் இந்நோயின் கொடுமையை உணர்த்தும்
காரணிகள் :
பொதுவாக பான்பராக் , பாக்கு , புகையிலை , அதிகமான காரம் பயன் படுத்துவோர் ,வைட்டமின் சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
பாக்கு , தம்பாக்கு, புகையிலை, அதிக காரம் போன்றவற்றை
தவிர்த்தல்,இரும்பு சத்து ,வைட்டமின் அதிகம் உள்ள உணவு
அதிகமாய் எடுத்தல் , அவ்வப்போழுது பல் மருத்தவரை காணுதல்,
வாய் நலம் பேணுதல், நலம் தரும் .
துவக்க நிலையில் பான்பராக்,பாக்கு நிறுத்தல்
காபி , டீ, ஆல்கஹோல் தவிர்த்தல் , மற்றும் சில எளிய வாய் திறக்கும் பயிற்சிகள் போதும்.
முற்றிய நிலையில் ஸ்டிராய்ட் இன்ஜெக்சன் தரும் முறையும்,
அறுவை சிகிச்சையும் தற்சமயம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஸ்டெம் செல் கொண்டு மருத்துவம் செய்தல் குறித்த
ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வருகின்றன.
.
.
.